விக்னேஸ்வரனின் கூட்டணியின் வேட்பாளர் நியமனங்கள் முற்றுப் பெறவில்லை!

Report Print Rakesh in அரசியல்

நாடாளுமன்றத் தேர்தலில், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி வடக்கு, கிழக்கில் போட்டியிடும் என்று கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

எனினும், கூட்டணியின் வேட்பாளர் நியமனங்கள் இதுவரை முற்றுப்பெறவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறியதாவது,

யாழ்ப்பாணம், வன்னி, மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை ஆகிய தேர்தல் மாவட்டங்களில் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி போட்டியிடவுள்ளது. திறமையான வேட்பாளர்கள் களமிறங்கவுள்ளனர்.

பெண்களுக்கான இட ஒதுக்கீட்டின் அடிப்படையில், யாழ்ப்பாணத்தில் அனந்தி சசிதரன் போட்டியிடுவார்.

வன்னியில் பெண் ஒருவர் போட்டியிடுவது தொடர்பில் பேசப்பட்டு வருகின்றது என குறிப்பிட்டுள்ளார்.