மீன் சின்னத்தின் தலைவர் யார்? - புதிய பதவிகளை அறிவித்தார் விக்னேஸ்வரன்

Report Print Rakesh in அரசியல்

சுரேஷ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் பெயரை தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியாக மாற்றியதால் அந்தக் கூட்டணியின் தலைவர் யார் என்பது சர்ச்சையாகவுள்ளது.

இந்நிலையில், நாடாளுமன்றத் தேர்தலில் 'மீன்' சின்னத்தில் போட்டியிடவுள்ள தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பதவி நிலைகளுக்குப் புதிதாக நியமிக்கப்பட்டவர்கள் தொடர்பில் சி.வி.விக்னேஸ்வரன் கருத்துத் தெரிவித்துள்ளார்.

அவரது கருத்துப்படி, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவராக சி.வி.விக்னேஸ்வரனும், செயலாளராக சிவசக்தி ஆனந்தனும், உப தலைவர்களாக சுரேஷ் பிரேமச்சந்திரன், பேராசிரியர் வி.பி.சிவநாதன், மூத்த சட்டத்தரணி என்.சிறிகாந்தா, அனந்தி சசிதரன் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கொள்கை பரப்புச் செயலாளர்களாக க.அருந்தவபாலன், சுரேஷ் பிரேமச்சந்திரன், என்.சிறிகாந்தா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.