மட்டக்களப்பு மாவட்டத்துக்கு நான்கு தமிழ் எம்.பிக்கள் வேண்டும்! துரைரெத்தினம் கோரிக்கை

Report Print Rakesh in அரசியல்

மட்டக்களப்பு மாவட்டத்தில் விகிதாசார அடிப்படையில் 4 தமிழ் நாடாளுமன்றப் பிரதிநிதிகளைத் தெரிவு செய்வதற்கு தமிழ் மக்கள் தயாராக வேண்டும் என்று கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் இரா.துரைரெத்தினம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

இந்த மாவட்டத்தைப் பொறுத்தவரையில் கடந்த காலங்களில் இரு தடவைகள் நாடாளுமன்றத் தேர்தலில் 4 தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.

பல தடவைகள் தேர்தல்களில் நாம் விகிதாசாரத்துக்கு ஏற்றவாறு தமிழ் பிரதிநிதித்துவம் பெறவில்லை என்பதைச் சுட்டிக்காட்ட வேண்டும்.

இந்த மாவட்டத்துக்கான 5 வேட்பாளர்களில் 4 தமிழ் நாடாளுமன்றப் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்பட வேண்டும்.

இனவாத அரசின் கைக்கூலிகள் வாக்குகளைப் பிரிப்பதற்காகத் தேர்தலில் வேட்பாளர்களாக இறங்கித் தமிழ் வாக்குகளைப் பிரிப்பதாலேயே தமிழர்களுடைய நாடாளுமன்றப் பிரதிநிதித்துவம் குறைகின்றது.

தமிழர்களாகிய நாங்கள் 4 நாடாளுமன்ற தமிழ்பிரதிநிதிகளைப் பெறவேண்டுமாயின் கடந்த காலத்தில் விட்ட தவறுகளை இந்தத் தேர்தலிலும் விட்டுவிடக் கூடாது. முதலில் ஒற்றுமையாகத் தேர்தலில் களமிறங்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.