கர்தினால் மல்கம் ரஞ்சித் விடுத்துள்ள எச்சரிக்கை

Report Print Steephen Steephen in அரசியல்

முன்னைய அரசாங்கமும், தற்போதைய அரசாங்கமும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என கர்தினால் மல்கம் ரஞ்சித் குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்த நிலையில் குறித்த தாக்குதல்களுடன் தொடர்புடைய முன்னைய அரசாங்கத்தின் அனைவரையும் குற்றப் புலனாய்வு துறையினர் விசாரணை செய்ய வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

ராகமையில் அண்மையில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் வைத்து அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடைய தனி ஆள் எவருக்கும் கத்தோலிக்கர்களின் வாக்குகள் கிடைக்காது.

தாக்குதல்களில் தொடர்புடைய சஹ்ரான் குழுவினருடன் சம்பந்தமுடையவர்கள் மீது அரசியல் காரணங்களுக்காகவே நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கண்டறியப்பட்டால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அறிக்கை ஒன்றை வெளியிட வேண்டும்.

இந்த நிலையில் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படாது போனால் தேர்தல் நடந்தாலும் நடக்காது போனாலும் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.