பிரித்தானியா விடுத்துள்ள புதிய தடை பட்டியலில் சவேந்திர சில்வாவின் பெயர் முதலிடத்தில்

Report Print Ajith Ajith in அரசியல்

பிரித்தானியாவின் புதிய தடைகளின் கீழ் இலங்கையின் இராணுவத்தளபதி சவேந்திர சில்வா உட்பட்ட அதிகாரிகளின் பெயர்கள் பட்டியலிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

இது தொடர்பில் பிரித்தானிய பொதுச்சபையில் எழுத்துமூல பதிலை சமர்ப்பித்துள்ள வெளியுறவு பிரதியமைச்சர் நைகல் அடம்ஸ் இந்த தகவலை உறுதிப்படுத்தவோ மறுக்கவோ இல்லை.

போர்க்குற்றங்கள் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள இலங்கை அதிகாரிகளின் மீது தடைகள் விதிக்கப்படுவதற்காக வாய்ப்புக்கள் உள்ளதா என்று கேட்கப்பட்டமைக்கு ஐக்கிய இராச்சியத்தின் தன்னாட்சிக்கு உட்பட்ட உலகளாவிய பொருளாதார தடைகளை கொண்டு வருவதற்கு எண்ணியுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவின் இரண்டாம்நிலை சட்டம் நிறுவப்பட்டவுடன் இந்த ஒழுங்குகள் நடைமுறைக்கு வரும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட 30-1,34-1, 40-1 யோசனைகளுக்கு பிரித்தானியா ஆதரவை வெளியிட்டு வருகிறது.

இதேவேளை போர்க்குற்றங்களுக்கு உள்ளாகியுள்ள சவேந்திர சில்வா இராணுவத்தளபதியாக நியமிக்கப்பட்டவேளையில் இலங்கையில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகரகம் ஐரோப்பிய பங்காளிகளுடன் இணைந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டதையும் அடம்ஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் தமது நாடு தொடர்ந்தும் இலங்கையின் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் விடயங்களில் இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து செயற்படும் என்றும் அடம்ஸ் தெரிவித்துள்ளார்.


you may like this video