40 வருடகால வரலாற்றில் ஈழ தமிழருக்கு கிடைத்த பெரும் சொத்து

Report Print Jeslin Jeslin in அரசியல்

தமது சட்டத்தரணி சேவையில் 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் எட்டாம் திகதியான நேற்றைய தினத்துடன் நாற்பதாவது ஆண்டில் காலடி எடுத்து வைக்கிறார் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா.

இலங்கையில் 40 வருட நீட்சியைக் கொண்ட கொடூர சட்டமான பயங்கரவாத தடைச்சட்டத்தை இந்த நான்கு தசாப்த காலமாக எதிர்கொண்டு மோதிய ஒரேயொரு சட்டத்தரணி அவர் தான்.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் பல நூறு வழக்குகளில் அரசியல் கைதிகளுக்காக முன்னிலையாகி அவர்களை விடுவித்த வரலாற்று சாதனைகளை புரிந்தவர் அவர்.

கடந்த 40 வருடங்களாக எவ்விதமான விளம்பரமுமின்றி, ஊடகங்களிலிருந்து விலகி மக்களுக்காய் இவர் பல சேவைகளை புரிந்துள்ளார்.

40 வருடங்களாக தமிழ் மக்களுக்காய் எவ்வித எதிர்பார்ப்புமின்றி பல சேவைகளை ஆற்றிவரும் சட்டத்தரணி தவராசா இலங்கை மக்களுக்கு குறிப்பாக தமிழ் மக்களுக்கு கிடைத்த மாபெரும் வரப்பிரசாதமென பலதரப்பட்ட மக்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இவ்வாறான நிலையில் அவர் எதிர்கொண்ட 40 வழக்குகளின் தொகுப்பு இதோ,