பொதுஜனபெரமுனவின் இணைப்பாளருக்கு ஜனநாயக மக்கள் காங்கிரஸில் கிடைத்த முக்கிய பதவி!

Report Print Theesan in அரசியல்

பொதுஜன பெரமுனவின் பூந்தோட்ட வட்டார இணைப்பாளராக செயற்பட்ட சிவலிங்கம் மகாதேவன் ஜனநாயக மக்கள் காங்கிரஸ் உடன் இணைந்துள்ளார்.

கடந்த வருடம் டிசம்பர் மாதத்தில் பொதுஜன பெரமுனவின் வவுனியா பூந்தோட்டம் வட்டார இணைப்பாளராக ஒருங்கிணைப்புக்குழு தலைவர் மற்றும் கட்சியின் வவுனியா மாவட்ட தமிழ் பிரிவுக்கான முக்கியஸ்தருமான பிறேம் ஆகியோரால் நியமிக்கப்பட்டிருந்த சி.மகாதேவன் இணைப்பாளர் பதவியில் இருந்து விலகி பிரபாகணேசனுடைய ஜனநாயக மக்கள் காங்கிரஸில் இணைந்து கொண்டதோடு, வவுனியா மாவட்ட அமைப்பாளராக அக்கட்சியினால் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுனவுடன் செயற்பட்டிருந்த இவர் தற்போது பிராபாகணேசனுடைய தேர்தல் பிரச்சார செயற்பாட்டிலும் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கட்சி மாறியமை தொடர்பாக சி. மகாதேவனிடம் வினவியபோது,

பொதுஜனபெரமுனவின் வவுனியா மாவட்ட செயற்பாட்டாளர்களின் கொள்கையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாகவே தான் அக்கட்சியின் செயற்பாடுகளில் இருந்து விலகியதாக தெரிவித்துள்ளார்.