ஹசனலியை வளைக்க ஹக்கீம் கடும் முயற்சி! கொழும்பில் முக்கிய சந்திப்பு

Report Print Rakesh in அரசியல்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கும் ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் செயலாளர் நாயகமுமான எம்.ரி.ஹசனலிக்கும் இடையில் சில தினங்களுக்கு முன்னர் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

ஹக்கீமின் அழைப்பின் பெயரில் இந்தச் சந்திப்பு நடைபெற்றதென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் பொதுச்செயலாளர் நாயகம் ஹசனலி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சிவில் அமைப்புகள் மற்றும் புத்திஜீவிகளின் வேண்டுகோளுக்கு இணங்க இந்தச் சந்திப்பு இடம்பெற்றதெனக் ஹக்கீம் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலின் போது முஸ்லிம்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பது தொடர்பில் இதன்போது பேசப்பட்டது எனக் ஹசனலி கூறியுள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலின் போது இன்றைய அரசியல் சூழ்நிலை தொடர்பிலும் அதிக கவனம் செலுத்தப்பட்டதெனவும் ஹசனலி மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கடந்த மாதம் கண்டியில் நடைபெற்ற பேராளர் மாநாட்டில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் உரையாற்றும்போது, மீண்டும் கட்சியில் வந்து சேருமாறு ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் ஹசனலிக்கு அழைப்பு விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.