கோட்டாபய ராஜபக்சவிடம் முக்கிய கோரிக்கையொன்றினை முன்வைத்துள்ள ரிசாத் பதியுதீன்

Report Print Ajith Ajith in அரசியல்

தமக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மற்றும் வில்பத்து காடழிப்பு தொடர்பிலேயே தம்மீது குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படுகின்றன.

இந்நிலையில் தமக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்ய குறைந்தபட்சம் ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்றையாவது அமைக்குமாறு பதியுதீன் கேட்டுள்ளார்.

இது தொடர்பில் நேரடியாக கோரிக்கையை முன்வைக்க ஒருவாரத்துக்குள் ஜனாதிபதியிடம் நேரம் ஒதுக்கி தருமாறு கேட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தம்மீது குற்றச்சாட்டுக்களை சுமத்தி சிலர் வாக்குகளை சேகரிக்க முயலவேண்டாம் என்று கோரியுள்ள ரிசாத் பதியுதீன், மதங்களுக்கு இடையில் பிணக்குகளை ஏற்படுத்த வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.