ரிஷாத் கட்சியினுடைய முன்னாள் எம்.பி. இஸ்மாயில் அதாவுல்லாவுடன் இணைவு!

Report Print Rakesh in அரசியல்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மயில் சின்னத்தில் கடந்த பொதுத்தேர்தலில் போட்டியிட்டு பின்னர் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த கலாநிதி எஸ்.எம்.எம். இஸ்மாயில், தேசிய காங்கிரஸின் தலைவர் முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாவுல்லா முன்னிலையில் இன்று காலை சம்மாந்துறையில் வைத்து இணைந்துகொண்டார்.

இந்த நிகழ்வில் முன்னாள் இராஜதந்திரியும் தேசிய காங்கிரஸின் சிரேஷ்ட பிரதித் தலைவருமான ஏ.உதுமாலெப்பை, அண்மையில் தேசிய காங்கிரஸில் இணைந்து கொண்ட பளீல் வீ. ஏ. ஆகியோரும் கலந்துகொண்டனர்.