ரணிலை தனது கட்சியில் இணைந்துகொள்ளுமாறு அழைப்பு விடுத்த சஜித்!

Report Print Ajith Ajith in அரசியல்

ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துக்கொள்ளுமாறு சஜித் பிரேமதாச, ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

தமது கதவு திறந்துள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர் கட்சியின் ஏனையோரும் தம்முடன் இணைந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுள்ளார்.

பிட்டகோட்டையில் இன்று கட்சியின் அலுவலகத்தை திறந்துவைத்தபோது அவர் இதனைக்குறிப்பிட்டார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் ஆரம்ப நிகழ்வுக்காக தாமும் கட்சியின் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டாரவும் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து அழைப்பு விடுத்ததாக சஜித் குறிப்பிட்டார்.

எனினும் தமக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்று ரணில் குறிப்பிட்டிருந்தமையை அவர் இதன்போது நிராகரித்தார்.

ஐக்கிய தேசியக்கட்சியே தம்மை பிரதமர் வேட்பாளராக அங்கீகரித்தது. அந்தக்கட்சியே தமது ஐக்கிய மக்கள் சக்திக்கான அங்கீகாரத்தை வழங்கியது என்றும் சஜித் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை இன்றைய நிகழ்வில் ஐக்கிய தேசியக்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ராஜித சேனாரத்ன, லக்கி ஜயவர்த்தன மற்றும் நிரோஷன் பெரேரா ஆகியோரும் பங்கேற்றமை குறிப்பிடத்தக்க விடயமாக இருந்தது.