ரணில், சஜித் பிரிந்து போட்டியிட்டால் அது தற்கொலைக்கு சமமாகும்!

Report Print Ajith Ajith in அரசியல்

ஐக்கிய தேசியக்கட்சியும், ஐக்கிய தேசிய சக்தியும் பிரிந்த நிலையில் பொதுத்தேர்தலில் போட்டியிட்டால் அது பரஸ்பர தற்கொலைக்கு ஒப்பானதாகும்.

இந்த கருத்தை ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ருவன் விஜேவர்த்தன தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக்கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் தமக்கிடையிலான வேறுபாடுகளை களைந்து போட்டியிடவேண்டும்.

இல்லையேல் சில மாவட்டங்களில் இரண்டு பிரிவுகளுக்கும் போட்டியிடமுடியாத நிலை ஏற்பட்டு விடும்.

வேட்பாளர் தெரிவை பொறுத்தவரையில் வேட்பாளர்கள் நிராகரிக்கப்பட்டால் அது இரண்டு கட்சிகளும் தனித்தனியே போட்டியிட வேண்டிய சூழ்நிலையை ஏற்படுத்தும்.

இது அரசாங்கத்துக்கு சவாலாக இருக்கமாட்டாது. எனவே ரணில்- சஜித் அணிகள் வேறுபாடுளை களைந்து ஒன்றிணையவேண்டும் என்று ருவன் விஜேயவர்த்தன கோரியுள்ளார்.