பொதுஜன பெரமுனவில் முஸ்லிம்களுக்கு வாய்ப்பளிக்க கூடாதென்பதனை மையமாக வைத்தே இணைப்பாளர் கட்சி மாறினார்!

Report Print Theesan in அரசியல்

பொதுஜனபெரமுனவின் வவுனியா பூந்தோட்ட இணைப்பாளராக செயற்பட்ட சி.மகாதேவன் கட்சி மாறியமை அவரது முஸ்லிம் எதிர்ப்பு நிலைப்பாட்டாலேயே ஆகும் என பொதுஜனபெரமுனவின் வவுனியா தமிழ் பகுதிக்கான அமைப்பாளர் க. பிறேம் தெரிவித்துள்ளார்.

பொதுஜனபெரமுனவின் வவுனியா பூந்தோட்டம் பகுதிக்கான இணைப்பாளராக செயற்பட்ட சி. மகாதேவன் இன்று கட்சி மாறி ஜனநாயக மக்கள் காங்கிரசில் இணைந்துகொண்டமை தொடர்பாக தமது தரப்பு நிலைப்பாட்டை ஊடகங்களுக்கு தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

சி. மகாதேவன் பொதுஜன பெரமுனவில் முஸ்லிம்களுக்கு வாய்ப்பு அளிக்க கூடாது என்ற நிலைப்பாட்டில் இருந்தார்.

ஒரு தேசியக்கட்சி இனரீதியாக செயற்பட முடியாத நிலை காணப்படும். அந்தவகையில் அவரது நிலைப்பாட்டுடன் கட்சி செயற்படவில்லை என்பதற்காகவே அவர் கட்சியை விட்டு வெளியேறினாரே தவிர வேறு எந்த கொள்கை முரண்பாடுகளும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.