ராஜபக்சர்களை பற்றி தமக்கு நன்றாக தெரியும்! மைத்திரி தரப்பினர்களுக்கு அழைப்பு

Report Print Ajith Ajith in அரசியல்

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியினர் சஜித் பிரேமதாசவின் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணையவேண்டும் என்று நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் விஜித் விஜியமுனி டி சொய்ஸா அழைப்பு விடுத்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் பிட்டகோட்டே அலுவலகத்தை திறந்துவைத்த நிகழ்வின்போது அவர் இதனைக்குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் பேசிய அவர், “ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியினரை ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி ஓரங்கட்டிவிடும்.

ராஜபக்சர்களை பற்றி தமக்கு நன்றாக தெரியும் என்று குறிப்பிட்ட விஜியமுனி சொய்ஸா, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியுடன் இணையவேண்டிய அவசியம் இல்லை என்று குறிப்பிட்டார்.