அனைத்து ரக எரிபொருட்களின் விலையையும் இன்று முதல் குறைக்கமுடியும்

Report Print Ajith Ajith in அரசியல்

எரிபொருள் விலை மீளாய்வு அட்டவணை செயற்படுத்தப்பட்டால் அனைத்து ரக எரிபொருட்களின் விலையை இன்று முதல் 20 ரூபாவினால் குறைக்கமுடியும் என்று முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

இந்த அட்டவணை நடைமுறைப்படுத்தப்பட்டபோது சர்வதேச சந்தையில் கிடைக்கும் நன்மைகளை பொதுமக்களுக்கு பெற்றுக்கொடுக்க நல்லாட்சி அரசாங்கம் உறுதிவழங்கியது இந்தநிலையில் தற்போது எரிபொருளின் விலை பீப்பாய் ஒன்று 65 அமரிக்க டொலரில் இருந்து 45 டொலராக குறைந்துள்ளது.

எனவே அரசாங்கம் இன்று முதல் ஒக்டெய்ன் 92 ரக பெற்றோலை 117 ரூபாவுக்கு விற்பனை செய்யமுடியும். ஒக்டெய்ன் 95 பெற்றோலை 141 ரூபாவுக்கு விற்பனை செய்யமுடியும். ஒட்டொ டீசல் ஒரு லீற்றரை 84 ரூபாவுக்கும் சுப்பர் டிசலை ஒரு லீற்றர் 112 ரூபாவுக்கும் விற்பனை செய்யமுடியும் என்று மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers

loading...