எதிர்வரும் பொதுத்தேர்தலில் 150 ஆசனங்களை கைப்பற்றி மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை பெறக் கூடிய அடையாளங்கள் தென்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் நிஷாந்த முத்துஹெட்டிகம தெரிவித்துள்ளார்.
நெலுவ - அத்துரேகெதர பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். மேலும் கூறுகையில்,
கட்சி அரசியலில் இடதுசாரிகள் வலுவடைந்து, வலதுசாரிகள் சிதறி போயுள்ளனர்.
ரணில் விக்ரமசிங்க, சஜித் பிரேமதாச பகிரங்கமாக சண்டையிட்டு கொள்ளும் நிலையில், நாட்டு மக்களின் எதிர்காலம் சுபிட்சமாக மாறவும் சௌபாக்கியமான நாட்டை உருவாக்கவும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் கிடைப்பதற்கான அடையாளங்கள் தென்படுகின்றன.
மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை பெறுவோம். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உட்பட பொதுஜன முன்னணி அதற்கு தயாராக உள்ளது.
அடுத்த ஐந்தாண்டுகளுக்கு அதிகாரத்தை செலுத்துவது மாத்திரமல்ல, 10 ஆண்டுகள் முடிவடையாத பயணத்தை செல்ல தயார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடன் ஐக்கிய தேசியக் கட்சிக்கு இணைந்து பணியாற்ற முடியாது.
ஐக்கிய தேசியக் கட்சியின் யானை சின்னம் இம்முறை வரலாற்றில் என்றுமில்லாதவாறு படு தோல்விடையை அடையும் எனவும் முத்துஹெட்டிகம குறிப்பிட்டுள்ளார்.