பொதுஜன முன்னணியின் கூட்டத்தில் மைத்திரி கலந்துக்கொள்ளவில்லை

Report Print Steephen Steephen in அரசியல்

ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன முன்னணியின் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் இடையில் நேற்றிரவு பேச்சுவார்த்தை நடந்துள்ளது.

கொழும்பு அலரி மாளிகையில் பிரதமர் மகிந்த ராஜபக்சவின் தலைமையில் இந்த பேச்சுவார்த்தை நடந்ததாக முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

மக்களுக்கு கூடுதலாக இருக்கும் உணரும் பிரச்சினைகள் குறித்து இந்த பேச்சுவார்த்தையில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அத்துடன் எதிர்வரும் பொதுத் தேர்தலை ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன முன்னணி எதிர்கொள்ளும் விதம், கூட்டணி கட்சிகளுக்கு இடையில் உள்ள பிரச்சினைகளை உடனடியாக தீர்ப்பது உள்ளிட்ட விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் கூட்டணியின் வேட்புமனுக்களை தயாரிப்பது குறித்து இதன் போது கருத்துக்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டுள்ளன. எது எப்படி இருந்த போதிலும் ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன முன்னணியின் தவிசாளரான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த பேச்சுவார்த்தையில் கலந்துக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.