ஜே.வி.பி 17,18,19 திகதி வேட்புமனுக்களை தாக்கல் செய்யும் - விஜித ஹேரத்

Report Print Steephen Steephen in அரசியல்

தேசிய மக்கள் சக்தி கூட்டணி எதிர்வரும் 17,18,19 ஆம் திகதிகளில் வேட்புமனுக்களை தாக்கல் செய்ய உள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் பிரசார செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்லை பெலவத்தையில் உள்ள மக்கள் விடுதலை முன்னணியின் பிரதான அலுவலகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

தேசிய மக்கள் சக்தி கூட்டணி அனைத்து மாவட்டங்களுக்குமான வேட்புமனுக்களை தயாரித்து முடித்துள்ளது. தேசிய மக்கள் சக்தி கூட்டணியின் பொதுச் செயலாளர் லக்ஷ்மன் நிபுணாராச்சி எதிர்வரும் 16 ஆம் திகதி மக்கள் விடுதலை முன்னணியின் பிரதான அலுவலகத்தில் வேட்புமனுக்களில் கையெழுத்திடுவார்.

வேட்புமனு தாக்கல் செய்த பின்னர் நாடு முழுவதும் பிரசாரங்களை ஆரம்பித்து மக்களுக்கு தெளிவுப்படுத்தும் வேலைத்திட்டங்கள் மற்றும் பொதுக் கூட்டங்கள் நடத்தப்படும் எனவும் விஜித ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.