ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலாளர் நீதிமன்றத்தில் சரண்

Report Print Steephen Steephen in அரசியல்
65Shares

கைது செய்யுமாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த அரசியல் பழிவாங்கல் தொடர்பாக விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலாளர் பேர்ள் கே. வீரசிங்க இன்று தனது சட்டத்தரணிகள் மூலம் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.

சட்டத்தரணி செனரத் ஜயசுந்தர மூலம் ஆணைக்குழுவின் செயலாளர் இன்று மதியம் விக்கும் களுவாராச்சி, தம்மிக்க கனேபொல மற்றும் ஆதித்ய பட்டபெந்திகே ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசேட மேல் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.

நீதிமன்றம் கோரியுள்ள அனைத்து ஆவணங்களையும் வழங்க தமது தரப்பு வாதி தயாராக இருப்பதாக சட்டத்தரணி செனரத் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில் அனைத்து ஆவணங்களையும் நாளைய தினம் குற்றவியல் விசாரணை திணைக்களத்திடம் கையளிக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டதுடன் பிடியாணையை திரும்ப பெற உத்தரவிட்டுள்ளனர்.

சாதாரணமாக பிடியாணை திரும்ப பெற பிணை செலுத்த வேண்டும் என்ற போதிலும் ஆணைக்குழுவின் செயலாளரின் மரியாதை மற்றும் செயலாளர் நீதிமன்றத்தில் ஆஜராகியதை கவனத்தில் கொண்டு பிணையின்றி பிடியாணையை திறம்ப பெற உத்தரவிடுவதாக நீதிபதி விக்கும் களுவாராச்சி தெரிவித்துள்ளார்.