ரஞ்சன் - சஜித் தொலைபேசி உரையாடல் - இருந்தது என்ன?

Report Print Steephen Steephen in அரசியல்

ரஞ்சன் ராமநாயக்கவின் குரல் பதிவுகளை ஆய்வு செய்து வரும் பொலிஸ் குழுவினருக்கு ரஞ்சன் மற்றும் சஜித் பிரேமதாச இடையிலான தொலைபேசி உரையாடல்கள் கிடைத்துள்ளன.

சுமார் 100 மணிநேரம் கொண்ட குரல் பதிவுகளில் இவர்களின் உரையாடல் இருப்பதாக கூறப்படுகிறது.

எவ்வாறாயினும் இதற்கு முன்னர் குரல் பதிவுகளை வெளியிட்டு அரசியல் இலாபம் பெற்றுக்கொண்ட ஆளும் கட்சியின் அணிகள், ரஞ்சன் மற்றும் சஜித் இடையிலான தொலைபேசி உரையாடல்களில் ஒரு பகுதியை மாத்திரம் தெரிவு செய்து வெளியிட்டுள்ளது. அதற்கான தேவை ஆளும் கட்சியின் அணிகளுக்கு இருந்துள்ளது.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் பிரசாரத்திற்கான சாதகத்தை பெற்றுக்கொள்ள எண்ணியிருந்தனர். கடும் முயற்சி செய்து குரல் பதிவுகளை ஆய்வு செய்த போதிலும் சில நிமிடங்கள் ஓடக் கூடிய குரல் பதிவை தெரிவு செய்து, தொகுக்க முயற்சித்த போதிலும் அது முடியாமல் போயுள்ளது எனவும் கூறப்படுகிறது.

குறித்த தொலைபேசி உரையாடல் முழுவதும் ரஞ்சன் ராமநாயக்க, சஜித் பிரேமதாசவிடம் ஆங்கிலம் கற்கும் விதமே காணப்பட்டுள்ளது.

ரஞ்சன் ராமநாயக்க கற்றல் சம்பந்தமாக கூடிய அக்கறை காட்டிய நபர் என்பதுடன் கடந்த வரும் உயர் தரப்பரீட்சையையும் எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது.