ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் பட்டியலின் கீழ் ஐக்கிய தேசிய கட்சியினருக்கு இடம் தருமாறு கோரிக்கை

Report Print Ajith Ajith in அரசியல்
257Shares

சஜித் பிரேமதாசவின் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் பட்டியலின் கீழ் ஐக்கிய தேசிய கட்சியினருக்கு இடம் தருமாறு ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவின் ஊடாக இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எனினும் ஏற்கனவே தனது பட்டியல் நிரப்பப்பட்டுள்ளதாக கூறி சஜித் தரப்பு இந்த கோரிக்கையை ஏற்றுக்கொள்ளவில்லை.

இதேவேளை முன்னாள் அமைச்சர்கள் மலிக் சமரவிக்ரம, அர்ஜுன ரணதுங்க ஆகியோர் ஐக்கிய தேசிய கட்சியின் நிலவரம் தொடர்பில் பேச்சு நடத்திய போதிலும் முடிவு எடுக்கமுடியவில்லை.