ரவி கருணாநாயக்கவுக்கு எதிரான வழக்கு நாளை வரை ஒத்திவைப்பு

Report Print Dias Dias in அரசியல்

முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிரான வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

A.H.M.நவாஸ் உள்ளிட்ட மூன்று நீதிபதிகள் கொண்ட விசேட குழாம் இந்த மனுவை விசாரணை செய்தது.

சட்டமா அதிபர் திணைக்களத்தின் பிரதி மன்றாடியார் நாயகம் மிலிந்த குணதிலக்க குறித்த வழக்கினை தாக்கல் செய்திருந்தார்.

ரவி கருணாநாயக்க சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கர் தவராசா வழக்கினை தாக்கல் செய்திருந்தார். அவரது சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா முன்னிலையாகியிருந்தார்.

இந்த நிலையில் குறித்த விவாதம் முடிவுறாத நிலையில் மீண்டும் இந்த வழக்கு நாளைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.