இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வாலிபர் முன்னணியின் தலைவர் கிருஸ்ணபிள்ளை சேயோனை மட்டக்களப்பு மாவட்டத்தில் வேட்பாளராக நியமிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் தமிழ் அரசுக் கட்சியின் தலைமையிடம் கட்சியின் வாலிபர் முன்னணி இன்று கடிதமொன்றினை கையளித்துள்ளது.
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் தெரிவில் இழுபறி நிலை காணப்படுகின்ற நிலையில், இறுதி முடிவு தொடர்பில் நாளை கட்சியின் உயர்மட்டக் குழு கூடி ஆராயவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையிலேயே இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வாலிபர் முன்னணியின் தலைவர் கிருஸ்ணபிள்ளை சேயோனை மட்டக்களப்பு வேட்பாளர் பட்டியலில் இணைக்குமாறு வாலிபர் முன்னணியினர் இணைந்து கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேவேளை, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் நியமனக்குழு நாளை மட்டக்களப்பில் கூடி வடக்கு,கிழக்கில் வேட்பாளர் பட்டியலை இறுதி செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது.