வன்னி மாவட்டத்தில் தமிழீழ விடுதலை இயக்கம் கட்சியின் ஆசன பங்கீடு பூர்த்தி!

Report Print Ashik in அரசியல்
121Shares

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு வன்னித்தேர்தல் தொகுதியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான தமிழீழ விடுதலை இயக்கம் (டெலோ) கட்சியின் வன்னி மாவட்ட வேட்பாளர்கள் முழுமையாக நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

வன்னி தேர்தல் தொகுதியில் வவுனியா,முல்லைத்தீவு,மன்னார் ஆகிய மூன்று மாவட்டங்களையும் உள்ளடக்கி தமிழீழ விடுதலை இயக்கம்(டெலோ) கட்சிக்கு வழங்கப்பட்ட 3 ஆசனங்களுக்கும், மூன்று வேட்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தமிழீழ விடுதலை இயக்கம் கட்சி அறிவித்துள்ளது.

டெலோ கட்சியின் வன்னி மாவட்டத்திற்கான குறித்த மூன்று வேட்பாளர்களின் விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என அக்கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.