தேர்தலை ஒத்திவைக்குமாறு கோரும் ரணில்

Report Print Steephen Steephen in அரசியல்

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பொதுத் தேர்தலை ஒத்திவைக்குமாறு முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்து அவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

சஜித் பிரேமதாச தலைமையிலான அணி ஐக்கிய மக்கள் சக்தி என்ற பெயரில் கட்சி ஒன்றை தேர்தல் ஆணைக்குழுவில் பதிவு செய்து அந்த கட்சியின் தொலைபேசி சின்னத்தில் எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட தீர்மானித்துள்ளது.

சஜித் தலைமையிலான அணியில் பல கட்சிகள் இணைந்துள்ளன. அத்துடன் ஐக்கிய தேசியக் கட்சி எதிர்வரும் பொதுத் தேர்தலில் யானை சின்னத்தில் போட்டியிடும் என அதன் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம், தேர்தல் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளார்.

சஜித் தலைமையிலான அணி, ஐக்கிய தேசியக் கட்சிக்கு சவாலா மாறியுள்ள சூழ்நிலையில், பொதுத் தேர்தலை ஒத்திவைத்தி வைக்கும் முனைப்புகளில் ரணில் தலைமையிலான அணியினர் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.