கொரோனா வைரஸூக்கு மத்தியில் தேர்தலுக்கு தயார் நிலை! மைத்திரிக்கு மீண்டும் பின்னடைவு

Report Print Ajith Ajith in அரசியல்

கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் அரசாங்கம் மேற்கொண்டு வரும் துரித நடவடிக்கைகளில் நம்பிக்கை வைத்து பொதுத்தேர்தலை ஏப்ரல் 25ல் நடத்த தேர்தல்கள் ஆணைக்குழு ஆயத்தங்களை மேற்கொண்டு வருகிறது.

இந்தநிலையில் ஐக்கிய தேசியக்கட்சியின் ரணில் தரப்புக்கும் ஐக்கிய மக்கள் சக்தியின் சஜித் தரப்புக்கும் இடையில் இணக்கத்தை கொண்டு வர தொடர்ந்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

எனினும் இணக்க முயற்சிகளில் சாதமான முடிவு எட்டப்படும் என்ற நம்பிக்கை குறைந்து வருவதாக அரசியல் தரப்புக்கள் தெரிவித்துள்ளன.

ஏற்கனவே சஜித் தரப்பு தொலைபேசி சின்னத்தை தமது தேர்தல் சின்னமாக அறிவித்து பணிகளை ஆரம்பித்துள்ளது.

இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஆசன ஒதுக்கீடுகள் இறுதிப்படுத்தப்பட்டுள்ளன

இதன்படி தமது முன்னணி 130ஆசனங்களை பெறும் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ச நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இதற்கிடையில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொலநறுவை மாவட்டத்தில் மஹிந்த ராஜபக்சவின் தலைமையிலான பொதுஜன முன்னணியின் கீழ் போட்டியிடவுள்ளார், எனினும் அந்த மாவட்டத்தில் போட்டியிடும் மூன்று வேட்பாளர்களில் மைத்திரிபாலவுக்கு மாவட்ட தலைவர் பதவி வழங்கப்படவில்லை.

மாறாக அது ஸ்ரீபால கம்லத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. மாவட்ட தலைவர் பதவியை மைத்திரிபால சிறிசேனவுக்கு வழங்க பொதுஜன முன்னணியின் தலைவர் மஹிந்த ராஜபக்ச ஆதரவு வெளியிட்டபோதும் ஏனையவர்கள் அதற்கு இணங்கவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.