மத்தளை விமான நிலையம் தொடர்பான இந்தியாவுடனான கலந்துரையாடலை இலங்கை நிறுத்தியுள்ளது

Report Print Ajith Ajith in அரசியல்

இந்தியாவுடன் மத்தளை விமான நிலையம் தொடர்பான முகாமைத்துவ கலந்துரையாடல்களை இலங்கை இடைநிறுத்தியுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் இந்தியாவும் அக்கறை கொண்டிருக்கவில்லை என்று அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

விமான நிலையத்தின் முகாமையில் இந்தியாவுக்கு 51 வீதம் 49வீதம் என்ற அடிப்படையில் பங்குகளை பகிரும் வகையில் இந்த பேச்சுக்கள் இடம்பெற்று வந்தன.

இதற்கான அனுமதியை கடந்த மார்ச் மாதத்தில் அமைச்சரவையும் வழங்கியிருந்தது. எனினும் இந்தியாவுக்கு 70வீத பங்கு என்ற அடிப்படையில் இந்த பங்கு விடயத்தில் உடன்பாடு காணப்படவில்லை.

எனவே இந்த கலந்துரையாடல்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் புதிய அரசாங்கத்தின் கீழ் அந்த விமான நிலையத்தை மாற்று வழிகளில் பயன்படுத்தி வருமானத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.