இன ஐக்கியத்தை விரும்புகின்றவர்களுக்கு சிந்தித்து வாக்களிக்க வேண்டும் - ரிஷாட் பதியுதீன்

Report Print Abdulsalam Yaseem in அரசியல்

இன ஐக்கியத்தை விரும்புகின்றவர்களுக்கு சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கோரிக்கை விடுத்துள்ளார்.

திருகோணமலை - கிண்ணியா நூலக மண்டபத்தில் நேற்றிரவு இடம்பெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன் போது அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது மக்கள் மத்தியில் இனவாதத்தை பரப்பியே வெற்றி பெற்றார்கள். நாட்டில் பாரிய கலவரத்தை தூண்ட பார்த்தார்கள் எனவும் சிறுபான்மையின மக்கள் பௌத்த மதத்தைச் சேர்ந்த இருவருக்குமே வாக்களித்தார்கள்.

சஜித் பிரேமதாச ஐக்கியத்தை விரும்பியதினாலேயே நாங்கள் அவருடன் இணைந்து செயற்பட்டோம். ஆனாலும் சஹ்ரான் என்பவரை ஒப்பிட்டு அனைத்து முஸ்லிம் மக்களையும் கொலைகாரர்கள் என பேசினார்கள். ஆனாலும் சிறந்த ஆற்றல் மிக்கவர்கள் ஐக்கியத்தை விரும்பிய பெரும்பான்மை இனத்தை சேர்ந்தவர்கள் ஒத்துழைப்பு வழங்கினார்கள்.

நம்பாமல் இருந்தார்கள் ஆனாலும் சிலர் சிங்கள மக்கள் மத்தியில் இனவாதத்தை பரப்பியே வெற்றி பெற்றார்கள்.

அத்துடன் சாதாரண தரம் கூட படிக்காத சஹ்ரானை ஒரு குண்டுதாரியாக்கி நாட்டில் பிளவுகளை ஏற்படுத்தினார்கள். சஹ்ரானை என்னுடன் ஒப்பிட்டு பெரும்பான்மை இனத்தவர்கள் மனதில் வெறுப்பை ஏற்படுத்தினார்கள். ஆனாலும் நான் எவ்வித பயங்கரவாத அமைப்புக்களுடனும் தொடர்பு இல்லை என்பதை உறுதிப்படுத்திய போதும் பல குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்கள்.

மேலும் பல குற்றச்சாட்டுகளை வைத்துக் கொண்டே வருகிறார்கள் ஆனாலும் நான் இறைவனை அஞ்சி இறைவனுக்கு பயந்து வாழ்ந்து வருகின்றேன் யாருக்கும் நான் தலைகுனிய மாட்டேன் எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.