தனிக் கட்சியின் கீழ் தேர்தலில் போட்டியிடும் ரதன தேரர்

Report Print Steephen Steephen in அரசியல்
168Shares

தான் உட்பட பௌத்த பிக்குகள் எமது மக்கள் சக்தி கட்சியின் கீழ் கொடிச் சின்னத்தில் இம்முறை பொதுத் தேர்தலில் போட்டியிட உள்ளதாக அத்துரலியே ரதன தேரர் தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில் தெற்கில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பௌத்த பிக்குகள் மற்றும் பிக்குகள் அல்லாதவர்கள் அடங்கிய வேட்பாளர்களை தேர்தலில் நிறுத்த உள்ளதாக அத்துரலியே ரதன தேரர் கூறியுள்ளார்.

தற்போது ஊடகங்களில் பிரபலமாக இருக்கும் இளம் பிக்குமார் தேர்தலில் நிறுத்தப்பட உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இம்முறை பிக்குமாருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்க போவதில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளதை அடுத்து அத்துரலியே ரதன தேரருக்கு பொதுத் தேர்தலில் போட்டியிடும் சந்தர்ப்பம் இல்லாமல் போயுள்ளது.

அத்துடன் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தேசிய பட்டியலிலும் ரதன தேரருக்கு வாய்ப்பை வழங்கவில்லை.

இதன் காரணமாக புதிய தேசிய அரசியல் அமைப்புக்கு தலைமை தாங்க தான் தயாராக இருப்பதாக ரதன தேரர் அண்மையில் ராஜகிரியவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கூறியிருந்தார்.

“ நான் 15 ஆண்டுகளாக நாடாளுமன்றத்தில் இருந்துள்ளேன். தேர்தலில் போட்டியிடுவதா இல்லையா என்பது முக்கியமல்ல, அரசியல் என்பது நாடாளுமன்றத்திற்கு செல்வதல்ல.

நாட்டுக்காக செய்ய வேண்டிய அழுத்தங்களை கொடுப்பேன். இஸ்லாமிய அறநெறி பாடசாலைகள் சம்பந்தமான தீர்மானத்தை எடுக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு 24 மணி நேரம் அவகாசத்தை வழங்கிறோம்.

காதி நீதிமன்றங்களை மூடுவதா இல்லை என்று தீர்மானிக்க வேண்டும். மக்களை ஏமாற்ற இடமளிக்க முடியாது. சவால் விடுத்தாலும் பிக்குமார் தேர்தலில் போட்டியிடுவார்கள் எனவும் அத்துரலியே ரதன தேரர் குறிப்பிட்டுள்ளார்.