ரொஷான் ரணசிங்க முதன்மை வேட்பாளர்: மைத்திரி வெறும் வேட்பாளர்

Report Print Steephen Steephen in அரசியல்

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன முன்னணியின் கீழ் போட்டியிடும் முன்னாள் ராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க, பொலன்நறுவை மாவட்ட முதன்மை வேட்பாளராக இன்று வேட்புமனுவில் கையெழுத்திட்டுள்ளார்.

வீரகெட்டிய கால்டன் இல்லத்தில் பிரதமர் மகிந்த ராஜபக்ச முன்னிலையில் அவர் வேட்புமனுவில் கையெழுத்திட்டுள்ளார். தனது 5 ஆண்டு அர்ப்பணிப்புக்கு தனக்கு உரிய இடம் கிடைத்திருப்பதாக ரொஷான் ரணசிங்க குறிப்பிட்டுள்ளார்.

பொலன்நறுவை மாவட்டத்தில் ரொஷான் ரணசிங்க தலைமையிலான வேட்பாளர் பட்டியலில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வேட்பாளராக போட்டியிடுகிறார்.

ரொஷான் ரணசிங்க, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கடுமையாக எதிர்த்து வரும் நபர் என்பது குறிப்பிடத்தக்கது.