யார் இந்த அம்பிகா..? மறைக்கப்படும் சில உண்மைகள்..

Report Print Jeslin Jeslin in அரசியல்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமது நீண்ட கால அங்கத்தவர்களையும் விசுவாசிகளையும் எதேச்சையாக புறம் தள்ளிவிட்டு எதிர்வரும் தேர்தலிற்கு வேட்பாளராக முன்மொழியும் அம்பிகா சற்குணநாதன் யார்.. என கட்டுரையாளர் ஜெஸ்லின் கேள்வி எழுப்பியதுடன் அது தொடர்பான பல வாதங்களையும் முன்வைத்துள்ளார்.

குறித்த விபரங்கள் வருமாறு,

இலங்கை மனித உரிமை குழு என்பது மேற்கு நாடுகளிலுள்ள அரசுகளைப் போல சுதந்திரமானதும் முழுமையானதும் அல்ல. இது முழுக்க முழுக்க இலங்கை அரசின் ஊதுகுழல்.

மறுபுறம், இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் தலைவி கலாநிதி டீபிகா உடுகம, முன்பு ஐ.நா மனித உரிமை உப ஆணைககுழுவின் உப அங்கத்தவராக 1998 முதல் 2001 வரை கடமையாற்றிய வேளை இலங்கை அரசின் நிலைப்பாட்டை பிரச்சாரங்களாக மேற்கொண்டவர் என்பதுடன் தமிழர்களுக்கு எதிரான இலங்கை அரசின் நிலைப்பாடுகளை சர்வதேசம் ஆதாரங்களுடன் கண்டித்த வேளை இலங்கை அரசின் பிரதிநிதிகளைவிட தமிழர்களை தரம்தாழ்த்தி. ஐ.நா சபையில் விடுதலைப் புலிகள் அமைப்பைக் கூட பயங்கரவாத அமைப்பு என்று கூறியவர்.

இந்த நிலையில், குறித்த டீபிகா உடுகமவிற்கு வலது கையாக செயற்பட்டுவருபவரே இந்த அம்பிகா சற்குணநாதன்.

மிக அண்மைய காலங்களில் ஜெனிவா சென்றிருந்த அம்பிகா வடக்கு கிழக்கு வாழ் மக்களிற்கு நடைபெற்ற மனித உரிமை மீறல்கள், அநீதி, கடத்தல், காணமல் போதல், இன அழிப்பு போன்றவை ப்றறி பந்த ஒரு கருத்தும் கூறாமல் இலங்கையில் நல்லாட்சி எனும் பொய்யாட்சிக்கு ஆதரவாகவும், டீபிகா உடுகமவின் கருத்துக்கும், தான் ஒரு தமிழ் பெண் என்பதை மறந்து ஆதரவாக குரல்கொடுத்து வந்தவர் இந்த அம்பிகா.

அத்துடன் மறைந்த நீலன் திருச்செல்வத்தின் அறக்கட்டளையின் தலைவி அம்பிகா என்பதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மறைக்கிறதா அல்லது மற்றவர்களுக்கு தெரியாது என்று நினைக்கின்றதா?

இன்னும் பலவற்றை கூறுவதாயின் தமிழ்த் தேசிய சிந்தனையற்ற பலரை இம்முறை நாடாளுமன்ற தேர்தலில் திரு. சுமந்திரன் களமிறக்குவது ஒட்டுமொத்த தமிழர்களின் தேசிய சிந்தனையையும் மலுங்கடித்து எதிர்வரும் காலங்களில் ஒரு பொடியாமி பியசேனவைப் போல் ஒரு கூட்டான பியசேனக்களை உருவாக்குவதே இதன் அடிப்படை நோக்கமா?

இவற்றின் பின்னணிகளையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தனி வழி பயணத்திற்கு தயார்ப்படுத்தும், அரசியல் சட்டம் மட்டும் அல்ல எல்லாவற்றிலும் திகழ்ந்து விளங்கும் திரு சுமந்திரன் அவர்களுக்கு நன்கு புரியும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிரேஸ்ட உறுப்பினர்கள் இன்னும் பொம்மைகளாக வாய்பேசா பிராணிகளாக பயணத்தை தொடர்வீர்களாக இருந்தால் வெகு விரைவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பௌத்த சிங்கள கூட்டமைப்பாக மாறி எதிர்வரும் காலங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் துவக்கக் கூட்டத்தில் புத்தம் சரணம் கச்சாமி.. தம்மங்க சரணம் கச்சாமி... எனும் பௌத்த மகுட வசனம் கூறியே தொடங்குவதை யாரும் தவிர்க்க முடியாது.

அண்மையில் சுமந்திரன் அவர்களின் மேடையில் ஒரு பேச்சாளர் குறிப்பிட்டிருந்தார், தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தமிழை தவிர வேறு எந்த மொழியும் தெரியாது. அதனால் ஒருவேளை அம்பிகா போன்றவர்கள் சுமந்திரனுக்கு தேவையாக இருந்திருக்கலாம் என்று.

அப்படியானால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாழ். பொது அரங்கில் அவமதிப்புக்கு உட்படுத்தப்பட்டமையைக் கூட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அறிந்தார்களா அல்லது பயந்து கொண்டிருக்கின்றார்களா என்பதுதான் கேள்விக்குறி..

ஒட்டுமொத்தத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் இனத்தின் அடையாளம். அதனை யாரும் திசை மாற்றி அல்லது கொள்கை மாற்றுவதற்கு நீங்கள் எல்லோரும் சேர்ந்து அனுமதிப்பீர்களாக இருந்தால் 45 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாவீரர்கள் மீது நீங்கள் நின்று பேசுகின்ற பேச்சுக்கு உங்களை தெய்வம் தண்டிக்காவிட்டாலும் இவர்களின் ஆத்மா ஒருபோதும் மன்னிக்காது.

எனவே தமிழ் மக்களின் விடியலுக்காக தங்களுடைய கண்களை மூடிய இந்த கனவான்களுக்காக ஒட்டுமொத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஓரணியில் நின்று பதில் சொல்லுமா? தென்னிலங்கை முகவர் அமைப்புக்களை இன்னும் களமிறக்கி, இருக்கும் தமிழ் தேசிய சிந்தனையும் சிதைக்கப்பட்டு ஒரு உணர்வற்ற கட்சியாக மக்களை நடைபிணங்களாக மாற்றுமா.

இந்த நிலை மாற வேண்டும். ஒரு ஆக்கப்பூர்வமான அரசியலுக்கு கூட்டமைப்பு ஒழுங்குபடுத்த வேண்டும். பொறுப்பு மிக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களே இன்னும் ஒன்றும் மாறவில்லை.

இன்னும் பலவற்றை அம்பிகாவின் பின்னணி பற்றி இங்கு கூறுவதை தவிர்த்து சுருக்கமாக கூறுவதானால் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அம்பாறை பொடிகாமி பியசேனபோல் பலரை இழக்க கூடிய வேட்பாளரையே இறக்குகிறார்கள்.

இது போன்று சிரேஸ்ட ஊடகவியலாளர்கள் சிலரும் தமது அதிருப்திகளை வெளியிட்டு வருகின்றனர்.