கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவது குறித்து கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ள சார்க் தலைவர்கள்

Report Print Ajith Ajith in அரசியல்

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் ஆலோசனையின்படி தெற்காசிய ஒத்துழைப்பு மாநாட்டு(சார்க்) தலைவர்கள் இன்று மாலை செய்மதி காணொளி மூலம் கலந்துரையாடி வருகின்றனர்.

இதன்போது கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் வழிகள் குறித்து அவர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.

இலங்கை ஜனாதிபதியின் வெளிநாட்டலுவல்கள் மேலதிக செயலாளர் அட்மிரல் ஜெயநாத் கொலம்பகே இது தொடர்பான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதா தெரிவித்துள்ளார்.

இந்த செய்மதி காணொளி மாநாட்டுக்கு இந்திய பிரதமர் அழைப்பு விடுத்திருந்தநிலையில் அதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தமது இணக்கத்தை வெளியிட்டிருந்தார்.

இந்தநிலையில் பாகிஸ்தானின் சார்பில் இந்த மாநாட்டில் பாகிஸ்தான் பிரதமரின் சுகாதாரம் தொடர்பான நிபுணர் ஸாபார் மிர்ஸா பங்கேற்றுள்ளார்.

இதேவேளை இந்திய பாகிஸ்தான் முறுகலால் 2014ஆம் ஆண்டில் இருந்து சார்க் நாடுகளின் மாநாடு இடம்பெறாமை குறிப்பிடத்தக்கது.