கடற்றொழிலாளர்களது பிரச்சினைகள் விரைவில் தீர்க்கப்படும்! அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

Report Print Varunan in அரசியல்

கடற்றொழிலாளர்களது பிரச்சினைகள் மற்றும் தேவைப்பாடுகள் தொடர்பில் நம்பிக்கையுடன் கடற்றொழில் அமைச்சு அனைத்து மக்களின் எதிர்பார்ப்புக்களும் நிறைவேற்றப்படுமேன கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாணத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ள அமைச்சர் அங்கு நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் இதன் போது மேலும் கருத்துதெரிவிக்கையில்,

அம்பாறை மாவட்டத்தின் ஒலுவில் மீன்பிடித் துறைமுகத்தில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருக்கும் அபிவிருத்தி பணிகள் தொடர்பாக ஆராய்ந்து மேற்கொள்ளப்பட வேண்டிய வேலைத்திட்டங்கள் தொடர்பாக ஆராய வந்துள்ளேன்.

ஒலுவில் பிரதேச மக்களின் கோரிக்கையை ஏற்று ஜனாதிபதி அவர்களும் பிரதமர் அவர்களின் பணிப்புரைக்கமைய கடற்தொழிலாளர்கள் மக்கள் பிரச்சினைகளை அந்த மக்களுடன் கலந்துரையாடி நடவடிக்கை எடுக்கவே வந்துள்ளேன்.

அத்துடன் இதில் பல்வேறு தரப்பினரின் ஆலோசனையை பெற்று ஒலுவில் துறைமுகத்தை பார்வையிட்டு தீர்வு காணும் வகையில் பிரதேச மக்களின் பிரச்சினைகளை அறிவதற்காக கடல் அரிப்பால் இவற்றை ஆய்வு செய்து மூலம் வாழ்வாதாரத்தை இழந்த மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கும் முயற்சிகளை மேற்கொள்வேன்.

கடல் அரிப்பால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குறிப்பிட்ட ஒரு காலத்துக்குள் தீர்வு வழங்க முடியாது அது ஆரம்பித்து வைக்கமுடியும் முற்றுமுழுதாக தீர்த்து வைக்க முடியாது. ஏனெனில் குறிப்பிட்ட காலத்திற்குள் தீர்வைவை பெறக்கூடிய விடயமல்ல.

அடுத்து துறைமுகத்தை இயங்கு நிலைக்குக் கொண்டுவர உடனடியாக முடியும். இரண்டு விடயத்தையும் சமகாலத்தில் ஆரம்பித்து வைப்பதற்கு தமது அரசாங்கத்துடன் இணைந்து செயல்படுத்த உள்ளோம் என்று கூறியுள்ளார்.

இதன் போது கிழக்கு மாகாணத்தின் நிந்தவூர்,வாழைச்சேனை,ஒலுவில் போன்ற மீன்பிடித் துறைமுகங்களுக்கு விஜயம் செய்து மீனவர்களின் குறைகள் தொடர்பில் கேட்டறிந்துள்ளார்.