சீனாவிடம் இருந்து மேலும் 700 மில்லியன் டொலர் கடனை பெறும் அரசு

Report Print Steephen Steephen in அரசியல்

சீன அபிவிருத்தி வங்கியிடம் இருந்து இலங்கை அரசாங்கம் மேலும் 700 மில்லியன் டொலர்களை கடனாக பெற தீர்மானித்துள்ளது.

இதற்கு முன்னர் 500 மில்லியின் டொலர்களை பெற்றுக்கொள்ள கையெழுத்திட்ட உடன்படிக்கைக்கு மேலதிகமான கடனாக இந்த தொகையை பெற்றுக்கொள்ள உள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில் சீன அபிவிருத்தி வங்கியிடம் இருந்து ஆயிரத்து 200 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கடனாக பெறப்பட உள்ளது.

இதனிடையே அத்தியவசிய பொருட்களை தவிர ஏனைய பொருட்கள் இறக்குமதி செய்வதை மூன்று மாதங்களுக்கு இடைநிறுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

கார்கள், குளிர்சாதனப் பெட்டிகள், மின்னணு பொருட்கள் உட்பட ஆடம்பர பொருட்கள் இறக்குமதி செய்வது இடைநிறுத்தப்பட்டுள்ளது எனவும் பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.

நிதி சந்தையில் கையிருப்பை தக்க வைக்க இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.