அனைத்துக்கட்சி மாநாட்டிற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ச அழைப்பு

Report Print Ajith Ajith in அரசியல்

நாட்டின் நடப்பு சூழ்நிலை குறித்து ஆராய பிரதமர் மஹிந்த ராஜபக்ச அனைத்துக்கட்சி தலைவர்களின் மாநாட்டை அழைத்துள்ளார்.

இந்த மாநாடு நாளை முற்பகல் 10 மணிக்கு அலரிமாளிகையில் நடைபெறவுள்ளது.

இந்த மாநாட்டில் பங்கேற்க போவதாக 19 கட்சிகளின் தலைவர்கள் மற்றும் முக்கிய அரசியல்வாதிகள் உறுதிப்படுத்தியுள்ளதாக தெரியவருகிறது.

இக்கட்டான சூழ்நிலையில் இந்த மாநாட்டை நடத்துமாறு முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய ஏற்கனவே கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த நிலையில் கரு ஜயசூரிய, தினேஸ் குணவர்த்தன, ஜி.எல்.பீரிஸ், பசில் ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன, சஜித் பிரேமதாச, ரணில் விக்ரமசிங்க, ஆர்.சம்பந்தன், மஹிந்த அமரவீர, ஆறுமுகன் தொண்டமான், டக்ளஸ் தேவானந்தா, விமல் வீரவன்ச, வாசுதேவ நாணயக்கார, தயாசிறி ஜயசேகர, அநுர திஸாநாயக்க, ரவூப் ஹக்கீம், எம்.ஏ.சுமந்திரன், மனோ கணேசன், உதய கம்மன்பில ஆகியோர் இதில் பங்கேற்கவுள்ளனர்.