அரசால் மட்டும் கொரோனாவை தனியாக எதிர்கொள்ள முடியாது!அனுரகுமார திஸாநாயக்க

Report Print Steephen Steephen in அரசியல்
94Shares

கொரோனா வைரஸ் காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமையில் இருந்த நாட்டை மீட்டெடுக்கும் நடவடிக்கையை அரசாங்கத்தினால் மாத்திரம் செய்ய முடியாது என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையகத்தில் இன்று ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இதன்போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

மக்களாக அனைவரும் ஒன்றிணைந்து அதனை எதிர்கொள்வதன் மூலமே இந்த அனர்த்தத்தை வெற்றி கொள்ள முடியும்.

தாமதித்தேனும் அரச கட்டமைப்பு பாராட்டத்தக்க மட்டத்தில் தீர்மானங்களை எடுத்து வருகிறது. தினமும் சம்பாதித்து வாழும் மக்கள் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும்.

உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ள வைரஸ் மக்களுக்குள் அச்சத்தை ஏற்படுத்தும் அளவுக்கு அதிகரித்துள்ளது.

உலகில் உயர்ந்த சுகாதார சேவைகள் இருக்கும் வளர்ச்சியடைந்த நாடுகளில் கூட கொரோனா தொற்று நோயாக மாறியுள்ளது.

இதனால் அனைவருக்குள்ளும் பயங்கரமான நிலைமை ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக இந்த அனர்த்தத்தில் இருந்து நாட்டை மீட்டெடுக்க பிரஜைகள் என்ற வகையில் நாம் அனைவரும் பொறுப்புடன் இதில் தலையிட வேண்டியுள்ளது.

அரச கட்டமைப்பால் மாத்திரம் இந்த அனர்த்தத்தை தனியாக எதிர்கொள்ள முடியாது.

முதன்மையாக பொறுப்பை நிறைவேற்றும் கட்டமைப்பாக அரச கட்டமைப்பு மாற வேண்டும் எனவும் அனுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.