கடனை செலுத்த சலுகை காலத்தை கோரும் ஜனாதிபதி

Report Print Steephen Steephen in அரசியல்
213Shares

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகக்கூடிய அதிகமான ஆபத்துள்ள அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள் பெற்றுள்ள கடனை திரும்ப செலுத்த சலுகை காலம் அல்லது கடன் தவணை செலுத்த வேண்டிய காலத்தை ஒத்திவைக்கும் வசதியை செய்துக்கொடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த கோரிக்கையை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, சர்வதேச நிதி நிறுவனங்களிடம் விடுத்துள்ளார்.

பல்தரப்பு மற்றும் இருத்தரப்பு நிதியுதவிகளை வழங்கும் நிறுவனங்களிடம் இந்த கோரிக்கையை விடுப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் உலக சுகாதார அமைப்பின் பணிப்பாளரிடம் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளதாகவும் ஜனாதிபதியின் செயலகம் அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவி வரும் நாடுகளில் சமூக இடைவெளி, பொது சுகாதாரம், சமூக பாதுகாப்பு பொறிமுறைகளை முகாமைத்துவப்படுத்த இந்த சலுகை உதவியாக இருக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.