தேர்தல் மேலும் மூன்று மாதங்களுக்கு ஒத்திவைக்கப்படலாம்

Report Print Steephen Steephen in அரசியல்
94Shares

ஏற்கனவே ஒத்திவைக்கப்பட்டுள்ள பொதுத் தேர்தல் கொரோனா வைரஸ் பரவல் நிலைமை காரணமாக குறைந்தது மேலும் மூன்று மாதங்களுக்கு ஒத்திவைக்கப்படலாம் என அரசாங்கத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொதுத் தேர்தல் எதிர்வரும் ஏப்ரல் 25 ஆம் திகதி நடைபெறவிருந்தது. தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய அதனை கடந்த 19 ஆம் மறு திகதியை அறிவிக்காது ஒத்திவைத்தார்.

தேர்தல் நடத்தப்படும் தினத்தை பின்னர் அறிவிப்பதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்திருந்தார்.

எனினும் கொரோனா வைரஸ் பரவி வரும் ஆபத்தான நிலைமை காரணமாக பொதுத் தேர்தல் ஏப்ரல் மாதத்தின் பின்னர் மேலும் மூன்று மாதங்களுக்கு ஒத்திவைக்கப்படலாம் என கூறப்படுகிறது.

ஜனாதிபதி செயலகத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இது சம்பந்தமாக கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.