அமைச்சரவைக் கூட்டத்தில் கொரோனா பற்றி மட்டுமே பேச்சு

Report Print Steephen Steephen in அரசியல்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டம் இரண்டு மணி நேரத்திற்கும் மேல் நடைபெற்றதுடன் இரண்டு மணி நேரமும் கொரோனா வைரஸ் சம்பந்தமாக ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பாக மட்டுமே கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

வழமையாக அமைச்சரவைக் கூட்டங்கள் நடைபெறும் போது 50 முதல் 60 வரையான அமைச்சரவை பத்திரங்கள் தாக்கல் செய்யப்படும் எனினும் இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் மூன்று பத்திரங்கள் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

அந்த மூன்று அமைச்சரவை பத்திரங்களும் கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பது தொடர்பானவை.

அமைச்சரவைக் கூட்டத்தில் கருத்து வெளியிட்டுள்ள ஜனாதிபதி, கொரோனா வைரஸ் பரவலில் இருந்து நாட்டை மீட்க தனக்கு கடும் தீர்மானங்களை எடுக்க நேரிடும் எனக்கூறியுள்ளார்.