கொரோனா வைரஸ் தாக்கம்! வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் குறித்து சஜித் விடுத்துள்ள கோரிக்கை

Report Print Murali Murali in அரசியல்

உலகம் முழுவதும் கொரோனா தொற்று பரவிவரும் நிலையில், வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் குறித்து அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச இன்று வெளியிட்டுள்ள விசேட அறிக்கையிலேயே இந்த கோரிக்கையினை விடுத்துள்ளார்.

விசேடமாக, இத்தாலி, தென் கொரியா, ஐரோப்பா உள்ளிட்ட ஏனைய நாடுகளில் உள்ள இலங்கை தொழிலாளர்கள் மற்றும் பிரஜைகள் தொடர்பில், ஒரு நாடு என்ற வகையில் அரசாங்கம் அவதானம் செலுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

குறித்த நாடுகளில் உள்ள இலங்கையர்களின் பாதுகாப்பு குறித்து, இலங்கை அரசாங்கம் இராஜதந்திர ரீதியாக தலையீடு செய்ய வேண்டும் எனவும் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார்.

வெளியுறவு அமைச்சு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு, தூதரகங்கள் மற்றும் இலங்கை அரசாங்கம் ஆகியன ஒன்றிணைந்து அவர்கள் குறித்து விசேட வேலைத் திட்டமொன்றை நடைமுறைப்படுத்த வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இலங்கையில் உள்ள அவர்களது குடும்பம் தொடர்பிலும், இலங்கை அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்த சூழலில் வெளிநாட்டில் உள்ள இலங்கைப் பிரஜைகளையும் கைவிடாமல் பாதுகாக்க வேண்டும் எனவும் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.