அடுத்த இரண்டு வாரங்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும்: ரமேஷ் பத்திரன

Report Print Steephen Steephen in அரசியல்

இலங்கையில் கொரோனா வைரஸ் பரவும் விதத்தை கவனத்தில் கொள்ளும் போது அடுத்த இரண்டு வாரங்கள் முக்கியமானதாக இருக்கும் என அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக சுகாதார துறையினர் வழங்கும் ஆலோசனைகளுக்கு அமைய மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறும் அவர் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அரச தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

அதேவேளை கொரோனா வைரஸ் காரணமாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு தொடர்பாக அமைச்சர் பந்துல குணவர்தன கருத்து வெளியிடுகையில், உலகில் பல செல்வந்த நாடுகள் இந்த வைரஸ் தொற்று காரணமாக பாதிப்புகளை எதிர்நோக்கி வருவதாக கூறியுள்ளார்.

எவ்வித வருமானமும் இல்லாத குடும்பங்களுக்கு உணவு அட்டையை வழங்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தீர்மானித்துள்ளார்.

முச்சக்கர வண்டிகள், பாடசாலை வேன் உரிமையாளர்களிடம் லீசிங் தவணையை அறவிட சலுகை காலத்தை வழங்குவதாகவும் பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.