உதயங்க வீரதுங்க கொழும்பு தேசிய வைத்தியசாலையில்

Report Print Steephen Steephen in அரசியல்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவர் தற்போது சிகிச்சைப் பெற்று வருவதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை விமானப்படைக்கு மிக் ரக தாக்குதல் விமானங்களை கொள்வனவு செய்வதில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி சம்பந்தமாக உதயங்க வீரதுங்க விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

துபாய் நாட்டில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்ததுடன் அங்கிருந்து நாடு கடத்திய நிலையில் குற்றவியல் விசாரணை திணைக்கள அதிகாரிகள் அவரை கைது செய்தனர்.

உதயங்க வீரதுங்க, பிரதமர் மகிந்த ராஜபக்சவின் சித்தியின் புதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது.