தேவையான அளவு பொருட்கள் கைவசம் - தட்டுப்பாடு ஏற்படாது

Report Print Rakesh in அரசியல்

இலங்கையில் ஏப்ரல் இறுதிவரை பொருட்களுக்கு எந்தவிதத் தட்டுப்பாடும் ஏற்படாது. தேவையான அளவு இருப்பு நாட்டில் கைவசம் உள்ளது என அமைச்சரவை இணைப்பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

"வழமையாக தமிழ் - சிங்களப் புத்தாண்டு வரும்வேளையில் முன்கூட்டியேபொருட்களைக் கைவசம் வைத்திருப்பதுதான் வியாபாரத் தந்திரமாக பின்பற்றப்பட்டு வருகின்றது.

இந்த முறையும் அவ்வாறு நடந்துள்ளது. ஏப்ரல் இறுதிவரை அத்தியாவசியப் பொருட்கள் உட்பட இதர இறக்குமதிப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு நிலவாது.

பருப்பு உட்பட சில பொருட்களை இலங்கையில் உற்பத்தி செய்ய முடியாது. உள்நாட்டில் குறுகிய காலத்துக்குள் உற்பத்தி செய்யக்கூடிய பொருட்களை உற்பத்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்காகவே பஸில் ராஜபக்ச தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு உற்பத்தியை மேம்படுத்துவதே எமது திட்டம். கடந்த காலத்தில் இது குழப்பியடிக்கப்பட்டது. எனினும், நாம் மீண்டும் கட்டியெழுப்புவோம்.