அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஐ.தே.கட்சி ஆதரவளிக்கும்!ரணில்

Report Print Steephen Steephen in அரசியல்

கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த நேர்மையாகவும் உண்மையாகவும் அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு நிபந்தனையின்றி ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவு வழங்கும் என அந்த கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ரணில் விக்ரமசிங்க விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இதனை கூறியுள்ளார்.

இந்த நெருக்கடியை எதிர்க்கொள்ளும் தேவை இருக்குமாயின் விசேட சட்டத்திட்டங்களை உருவாக்க நடவடிக்கை எடுக்குமாறும் அவர் அரசாங்கத்தை கேட்டுள்ளார்.

உலகம் முழுவதும் வைரஸ் பரவுவதை கவனத்தில் கொள்ளும் போது இது இலகுவானதாக கருத முடியாத விடயம். சமூக இடைவெளியை தொடர்ந்தும் முன்னெடுப்பது மிகவும் முக்கியமானது.

சுகாதார துறையினர் கூறுவது போல் ஏப்ரல் மாதம் 4 ஆம் திகதியில் இருந்து 11 ஆம் திகதி வரையில் இந்த வைரஸ் தொற்று இலங்கையில் அதிகரிப்பை காட்டக் கூடும் என்பதால், மிகவு் கவனத்துடன் செயற்பட வேண்டும் எனவும் ரணில் விக்ரமசிங்க தனது அறிக்கையில் கூறியுள்ளார்.