அரசாங்கம் முழு நாட்டையும் பட்டினியில் வைத்திருக்க முயற்சிக்கின்றது! காவிந்த

Report Print Sujitha Sri in அரசியல்

தனிமைப்படுத்துவதாக கூறி அரசாங்கம் முழு நாட்டையும் பட்டினியில் வைத்திருக்க முயற்சித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த குற்றச்சாட்டை ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜெயவர்தன முன்வைத்துள்ளார்.

இணையத்தளம் வாயிலாக வெளியிட்டுள்ள காணொளியில் அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

மேலும் கூறுகையில்,

தற்போது அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ளன. அத்துடன் அனைத்து வர்த்தகங்களும் வீழ்ச்சியடைந்துள்ளன.

நாட்டு மக்களை பிச்சைக்கார்களாக மாற்றி, முழு நாட்டையும் தனிமைப்படுத்துவதில் பயனில்லை என கூறியுள்ளார்.