13வது அரசியலமைப்பை நடைமுறைப்படுத்துவதே தமது கொள்கை! சஜித் பிரேமதாச

Report Print Ajith Ajith in அரசியல்

இலங்கையில் 13வது அரசியலமைப்பை நடைமுறைப்படுத்துவதே தமது கொள்கை என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் மாகாணசபை முறையை பலப்படுத்தவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய ஊடகம் ஒன்றக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் பேசியுள்ள அவர்,

மாகாணங்களுக்கு இடையில் ஆழமான முறையில், ஒற்றையாட்சியின் கீழ் அதிகாரங்களை பகிர்ந்து சுயாட்சியை உறுதிசெய்வதே தமது கொள்கை என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியா ஒரு ஆசியாவின் பாரிய சக்தி மட்டுமல்ல. யூரேசியாவின் பெரிய சக்தியாகும். இலங்கையின் சிறந்த அண்டை நாடு.

புவியியல், வரலாறு மற்றும் பகிரப்பட்ட நாகரிக பாரம்பரியம் என்பவற்றில் இலங்கையுடன் இந்தியாவுக்கு நெருங்கிய உறவு உள்ளது.

இந்த உறவை உயர்ந்த மற்றும் சிறந்த மட்டத்தில் பேணப்படுவதை தாம் உறுதி செய்யப்போவதாகவும் சஜித் பிரேமதாச கூறியுள்ளார்.