அமெரிக்காவில் சமூக இடைவெளித்திட்டம் ஏப்ரல் இறுதிவரை நீடிப்பு

Report Print Ajith Ajith in அரசியல்

கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் முகமாக அமெரிக்காவில் சமூக இடைவெளித்திட்டம் எதிர்வரும் ஏப்ரல் இறுதிவரை நடைமுறைப்படுத்தப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்

நேற்று வெள்ளை மாளிகை செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர்,

அமெரிக்காவில் கொரோனா வைரஸிக்கு எதிரான hydroxychloroquine மருந்து நியூயோர்கில் 1100 கொரோனா வைரஸ் தொற்றாளர்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது.

இது தரும் பலனை பொறுத்து நம்பமுடியாத முடிவுகளை பெற்றுக்கொள்ள முடியும் என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவில் கொரொன வைரஸிக்கு எதிரான நடவடிக்கையில் இளைப்பாறிய 20 ஆயிரம் மருத்துவத்துறையினர் இணைந்துள்ளனர்.

அங்கு கடந்த 24 மணித்தியாலங்களில் 209 பேர் மரணமாகியுள்ளனர். ஸ்பெய்னில் 24 மணித்தியாலங்களில் 838 பேர் மரணமமாகினர்.

இதனையடுத்து அங்கு மரணமானோரின் எண்ணிக்கை 6500 ஆக உயர்ந்துள்ளது. இத்தாலியில் கடந்த 24 மணித்தியாலங்களில் 754 பேர் மரணமாகினர்.

இதனையடுத்து அங்கு மரணமானோரின் எண்ணிக்கை 10 ஆயிரத்து 779 ஆக உயர்ந்துள்ளது. பிரான்ஸில் 24 மணித்தியாலங்களில் 292 பேர் மரணமாகினர்.

இந்தியாவில் இதுவரை 27பேர் உயிரிழந்தனர். தமிழகதத்தில் கொரோனா தொற்றாளிகளின் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது. மலேசியாவில் கடந்த 24 மணித்தியாலங்களில் 7 பேர் மரணமாகினர்.

இதுவரை உலகளாவிய ரீதியில் 32 ஆயிரத்து 137 பேர் கொரோனாவைரஸினால் மரணமாகியுள்ளனர். 6 இலட்சத்து 85ஆயிரம் பேர் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.