மருத்துவ ஆலோசனையை மீறி அரசியல் கூட்டத்தை நடத்திய சம்பிக்க

Report Print Steephen Steephen in அரசியல்

மருத்துவ ஆலோசனையை பின்பற்றாமல் நேற்றைய தினம் அரசியல் கூட்டம் ஒன்றை நடத்திய முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சரின் வீட்டில் நேற்று இந்த கூட்டம் நடைபெற்றுள்ளது.

கூட்டத்தில் கலந்து கொண்டவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த சுகாதார துறையினர் நடவடிக்கை எடுத்திருந்தனர்.

இந்த கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்த சம்பிக்க ரணவக்கவுக்கு எதிராக நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.