ஜனாதிபதிக்கும், ஐக்கிய தேசியக் கட்சியினருக்கும் இடையிலான சந்திப்பு ஒத்திவைப்பு!

Report Print Ajith Ajith in அரசியல்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும், ஐக்கிய தேசியக்கட்சிக்கும் இடையில் நேற்று இடம்பெறவிருந்த சந்திப்பு நாளை வரை ஒத்திவைக்கப்பட்டது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க, ருவன் விஜேவர்த்தன, தயா கமகே, அர்ஜூன ரணதுங்க மற்றும் லச்மன் விஜயமான்ன ஆகியோர் கொண்ட குழுவே ஜனாதிபதியை சந்திக்கவுள்ளது.

கொரோனா வைரஸ் தொடர்பிலேயே இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாகவும், அரசியல் தவிர்க்கப்படும் என்றும் ஐக்கிய தேசியக்கட்சி தரப்புக்கள் தெரிவித்துள்ளன.

இதேவேளை, இலங்கையில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகின்ற நிலையில், இது வரையில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன், 122 பேர் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.