நிவாரணப்பொருட்களை பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலவசமாக வழங்க வேண்டும்! - சஜித்

Report Print Ajith Ajith in அரசியல்

கொரோனா வைரஸ் தொற்றால் நாடு பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நிவாரணக் கொடுப்பனவுகளை அரசியல்மயப்படுத்த வேண்டாம் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்

நிவாரணப்பொருள் விநியோகத்தின்போது அரசியல் நலன் முன்னிலைப்படுத்தப்படுவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

இந்த நிலையில் நிவாரணப்பொருட்களை பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சஜித் பிரேமதாச கோரியுள்ளார்

அத்துடன் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த அரசாங்கம் இறக்குமதி செய்யும் உபகரணங்கள் சுகாதாரத்துறையினருக்கு பாதுகாப்பை அளிக்கும் வகையில் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும்.

இதேவேளை பாட்டலி சம்பிக்க ரணவக்க, ரிசாத் பதியுதீன், திகாம்பரம், மனோ கணேசன், ராஜித சேனாரத்ன ரவூப் ஹக்கீம் மற்றும் குமார வெல்கம ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் அரசாங்கம் நிதிகளை அரசாங்கம் சட்டவிரோதமாக செலவிடக்கூடாது என்று வலியுறுத்தியுள்ளனர்.

அத்துடன் பொதுத்தேர்தலை நடத்திவிடவேண்டும் என்ற அவசரத்தில் அரசாங்கம் கொரோனா வைரஸ் தொற்று கட்டுப்பாட்டு விடயத்தில் தாமதம் காட்டியுள்ளதாகவும் இந்த கட்சி தலைவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.